“தலைவர் தளபதி அவர்களுடைய செயல்பாடுகளால் கவர்ந்திழுக்கப்பட்ட நான், 1987ம் ஆண்டு தி.மு.க. இளைஞர் அணியில் என்னை இணைத்துக்கொண்டு கழகப் பணிகளில் ஈடுபடத் துவங்கினேன். அந்தக் காலத்தில், கழக இளைஞர் அணி சார்பாக இயக்கத்தின் கொடியை கழகத் தலைவர் தன்னுடைய திருக்கரங்களால் எங்கள் பகுதியில் ஏற்றினார். அந்த நிகழ்ச்சியில் முனைப்போடு நான் கலந்து கொண்டதை இப்போது நினைத்தாலும், புல்லரிக்கிறது” என்று நம்மிடம் உணர்வு பொங்கப் பேசினார் எம்.குமார்.
50 வயதாகும் எம்.குமார் அவர்கள், தற்போது திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி நகரம், 27 வது வட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். குமார் அவர்களிடம் நமது வினாக்களை தொடர்ந்தோம்.
இதற்கு முன்னர் நீங்கள் கழகத்தில் வகித்த பொறுப்புகள் மற்றும் பதவிகள் பற்றி?
“பழைய 45வது வட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்த நான், அதைத் தொடர்ந்து தற்போது நகர பிரதிநிதியாகவும், 27வது வட்ட கழகச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறேன். மேலும், 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகர மன்றத்தின் 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு, கழகத் தலைவர் தளபதியார் ஆசியுடனும், எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் ஆதரவோடும், மக்களின் வரவேற்புடன் வெற்றி பெற்று, 2016ம் ஆண்டு வரையில் சிறப்பாக மக்கள் பணியாற்றினேன்.
2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, எங்கள் 27வது வார்டில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்தார்கள். இவர்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 6500. அந்தத் தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டார்கள். கழகத்தின் சார்பாகப் போட்டியிட்ட நான், கழகத் தலைவர் தளபதியார் ஆசியுடன், மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் ஆதரவோடும் அ.தி.மு.க.வினரின் அராஜக நடவடிக்கைகளையும் மீறி சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்தான், ஆவடி நாசர் அவர்கள் ஆவடி நகரமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, தலைவர் தளபதியாரின் ஆசியுடன் வெற்றி பெற்றார். ஆவடி நாசர் அவர்கள் தன்னுடைய பதவிக் காலத்தில், தலைவர் தளபதியாரின் ஆசியுடன் செய்து முடித்த மக்கள் நலப் பணிகள் ஏராளம் ஏராளம். அந்தப் பணிகள் யாவும் இன்றைக்கும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.”
நீங்கள் கவுன்சிலராக பதவி வகித்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் வரையிலான காலகட்டத்தில், உங்கள் வார்டில் செய்து முடித்த மக்கள் நலப் பணிகள் பற்றி?
“மொத்தம் 110 இடங்களில் சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகள் உருவாக்கப்பட்டன. 15 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் 100 சதவீதம் முன்னெடுக்கப்பட்டன. தெருவிளக்குகள் 100 சதவீத பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இப்படியாக எனது பதவிக்காலத்தில் கழகத் தலைவர் தளபதியாரின் ஆசியுடன், மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் வழிகாட்டுதலோடு ஏராளமான மக்கள் நலப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டன. அந்தப் பணிகள் யாவும் இப்போதும் எங்கள் பகுதி மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.”
உங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் பற்றி?
“பொதுப்பணியாகட்டும், கட்சிப்பணியாகட்டும், எங்கள் மாவட்டச் செயலாளரின் செயல்பாடுகள் யாவும் வெளிப்படையாக இருக்கும். இதுதான் அவருடைய தனித்துவம். திறந்த புத்தகம்போன்று அவருடைய செயல்பாடுகள் இருப்பதால்தான், அவரைப் பற்றி யாராலும் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. அவருடைய வீட்டுக்கு யார் சென்றாலும், முதலில் தேநீர் உபசரிப்பு உறுதியாக இருக்கும். அதன் பிறகுதான் நம்முடைய பிரச்னைகளைக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முழு மனதோடு செய்வார். அவரால் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று இதுவரையில் எதுவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. கழகத் தலைவர் தளபதியார் அவர்களால் எங்களுக்கு கிடைத்த புதையல் பொக்கிஷம் எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர்.”
ஆவடி நகரச் செயலாளர் இராஜேந்திரன் பற்றி?
நான் தற்போது வட்டக் கழக செயலாளராக செயல்படுவதற்கும், சிறப்பாக களப்பணியாற்றுவதற்கும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் கவுன்சிலராக இருந்தபோது சிறப்பாக மக்கள் பணியாற்றியதற்கும் தலைவர் தளபதியார் ஆசியுடன், எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்களின் வழிகாட்டுதலோடு எங்கள் நகரச் செயலாளர் இராஜேந்திரன் அவர்கள் எனக்குத் தரும் ஒத்துழைப்பே காரணம் என்பதை இங்கே பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்.”
வேறு ஏதாவது?
“2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் ஆவடி நாசர் அவர்கள் நகரமன்றத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், தலைவர் தளபதியார் ஆசியுடன் செய்து முடித்த ஏராளமான சாதனைப் பணிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஆரம்ப சுகாதார நிலையம், மின் மயானம் மற்றும் 'பயோ கேஸ்' ஆகிய பணிகள் இன்றைக்கும் எங்கள் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதுபோல், 2015 மற்றும் 2016ம் ஆண்டு பெய்த பெரு மழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது, எங்கள் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பொருட்டு, அரிசி, ஆடைகள், கொசுவர்த்திச் சுருள், பிஸ்கட்ஸ், காய்கறிகள் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். இந்தப் பொருட்களை எங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் முறையாக வழங்கினேன். இதுவும் எங்கள் பகுதி மக்களிடையே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்பதையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.” .