முப்பெரும் விழா! நமது உயிர் விழா!


பெரியாரே! சமூக வலைத்தளத்தில் உன் ஆட்சி                       
பெண்களிடம் வாழ்க்கையின் உன் மாட்சி!


இந்தியாவில் உன்னை ஆதரித்தும் எதிர்த்தும் அலைவீச்சு
பாராளுமன்றத்தில் அதிரும் உன் கதிர்வீச்சு!


மோதவில்லை கோழை அவன் உன் கருத்தோடு           
நீ இறந்த பின்னும் தூக்கிப் போகிறான் பாடையோடு!


தீயின் போரே உன் சிலை முன் அவன் ஆடுகிறான்
நீ மூத்திரம் விட்ட நிலை சொன்னா மூத்திரம் விட ஒடுகிறான்!


சாதி மதம் சடங்கு கடவுள் மறுப்பு
இனம் மொழி பெண்ணுரிமை நீயே மீட்பு!


சந்திராயன்-2 இடம் மாறிவிட்டது
அறிவியலே வியக்கும் உன் தடம் நிலைத்துவிட்டது!


அன்று நீ தீட்டு, தெருவில், நுழையாதே என்றார்கள்
அண்ணாதீட்டுக்காரன் பெயரை தெருவுக்கே வைத்தார்கள்!


பெரியார் கொள்கையோடு திமுக-வை தொடங்கினார்
தி.க, தி.மு.க இரட்டை குழல் துப்பாக்கி என முழங்கினார்!


நூல் கட்டிவிட்டால் உன் எழுத்து மல்லிகைப் பூச்சரம்
தம்பி கேள் என்றால் உன் உரைகள் உரம்!


12 எண்களை முள் தொட்டால் தான் கடிகாரம்
மாநில சுயாட்சி என்பது மாநிலங்களின் அதிகாரம்!


நெருங்க முடியாதது அண்ணாவின் அரசியல் கணக்கு
பெரியார் அண்ணா திமுக பிறந்தது பெருமை நமக்கு!